96 திரைப்பட இயக்குனர் திரு பிரேம்குமார் அவர்களுக்கு நடிகர் விஜய்சேதுபதி கொடுத்த பரிசு பற்றி மனம் திறக்கிறார்.
எனக்கு நிறைய டிராவல் பண்ண பிடிக்கும். விஜய் சேதுபதிக்கு அவ்ளோ புடிக்காது. '96' படத்துல டிராவல் சாங் எடுக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டாரு. எனக்கு டிராவல் ஃபோட்டோக்ராஃபர் ஆகணும்னு கூட ஆசை இருந்துச்சி. ஆனால் முடியல. சினிமாவுக்கு வந்துட்ட.
எனக்கு சின்னவயசுல இருந்தே புல்லட் ஓட்டுறது புடிக்கும். சமிபத்துலதான் 'ராயல் என்பில்டு இன்டெர்செப்டர்' வண்டி வெளியிட போறாங்கனு தெரிஞ்சுது. இந்தியாவுல தயாரிக்கிற அதிக திறன் இருக்க வண்டி அது. நம்ப பொருளாதாரத்துக்கு அது விலை அதிகமான வண்டிதான். எங்களுக்குனு ஒரு வாட்ஸ் ஆப் குழு இருக்கு. அதுல விஜய் சேதுபதியும் இருக்காங்க. நான் "இதுபோல ஒரு வண்டி வரப்போகுது"னு வாட்ஸ் ஆப்ல சொல்லிட்டே இருந்தேன். சேதுபதி என்கிட்ட "நான் புக் பண்ணிட்ட, நீங்க பண்ணிட்டிங்களா"னு கேட்டாங்க, அடுத்தபடம் ஒப்பந்தம் ஆச்சுன்னா வாங்கலாம்ங்குற நோக்கத்துல "இன்னும் இல்ல, பண்ணனும்"னு சொல்லிட்டேன். ஆனால் அவருக்கு அது புரிஞ்சுருக்கு. அப்பறம் ஒருநாள் ஆபீஸ்க்கு வரசொல்லிருந்தாங்க. ரூம்ல கூப்பிட்டு ஏதேதோ பேசிட்டு இருந்தாங்க. கொஞ்சநேரத்துல ஒரு ப்ரிண்ட் அவுட் வந்துச்சி. என் பேருல வண்டி புக் பண்ணுன ரிசிப்ட் அது. எனக்கு ஷாக் ஆகிட்டு. அவரு சிரிச்சிகிட்டே என்ன நம்பர் வேணும்னு கேட்டாங்க. எனக்கு 96 தான் தோணுச்சு, நான் விஜய் சேதுபதிக்கு வண்டி வாங்குனா 96 நம்பர்ல வாங்க சொல்லலாம்னு இருந்தேன். முதலில் 96 நம்பர் கிடைக்கல, வேற நம்பர் ஏதாவது கேட்டாங்க. நான் 2018 னு சொன்னேன்.
சரியா விஜய் சேதுபதியோட பிறந்தநாளுக்கு முன்னாடி. '0096' நம்பர் போட்டே அந்த வண்டி வந்துச்சி. விஜய் சேதுபதியே வண்டிய ஒட்டிக்கிட்டு வந்தாங்க. வீட்டுக்கு வந்து என்ன ஒரு ரவுண்டு போயிட்டுவர சொல்லி, பாத்துட்டு, அப்புறம் கெளம்பி போனாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. ஊர்ல யாராவது ஒருத்தர் புல்லட் வச்சிருந்தாலே ஆச்சர்யமா பாத்துருப்போம். இப்ப என்கிட்டேயே ஒரு இன்டெர்செப்டர் வண்டி இருக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என நேகிழிந்து பேசினார் பிரேம்.