Skip to main content

திருமாவளவனை அடுத்து அன்புமணி - நட்பு பாராட்டும் விஜய்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

vijay wishes anbumani ramadoss

 

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. இதனிடையே டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யத் தொடங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர், தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு மரியாதை செய்து வருகின்றனர். 

 

மேலும் தற்போதைய அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு தொலைப்பேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி பிறந்தநாளுக்கு தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். 

 

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி-க்கு தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விஜய்யின் சர்க்கார் பட ஃபசர்ட் லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் அமைந்திருக்கும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ பட முதல் பாடல் வெளியீட்டுக்குப் பிறகு அதில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிக்கு விஜய் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்