Skip to main content

மாநகரம் இந்தி ரீமேக்... வைரலாகும் விஜய் சேதுபதி கெட்டப்!

Published on 22/03/2021 | Edited on 22/03/2021

 

vijay sethupathi

 

ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா கெசண்ட்ரா, சார்லி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான படம் 'மாநகரம்'. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய லோகேஷ் கனகராஜ், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்த்திற்கு உயர்ந்துள்ளார். தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

 

ad

 

'மும்பைகர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்தில், விக்ராந்த் மாசே, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தமிழில் முனீஸ்காந்த் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அக்கதாபத்திரத்திற்கான பிரத்யேக தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்