Skip to main content

இந்தியில் ரீமேக்காகும் மகாராஜா - விஜய்சேதுபதியாக ‘கான்’ நடிகர்

Published on 29/07/2024 | Edited on 29/07/2024
vijay sethupathi maharaja hindi remake update

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது. 

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டைபெற்றது. மேலும் இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் நிலையில் 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இப்படத்தின் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினரை விஜய் நேரில் அழைத்து பாராட்டினார். அந்த சந்திப்பு குறித்து நித்திலன் சாமிநாதன், தனது எக்ஸ் பக்கத்தில் மகாராஜாவைப் பற்றி அவர் கூறிய விவரங்கள் நெகிழவைத்திருந்ததாக பாராட்டியிருந்தார். 

vijay sethupathi maharaja hindi remake update

இந்த நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக்காகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதன் உரிமையை பாலிவுட் முன்னணி நடிகரான அமிர் கான் வாங்கியிருப்பதாகவும் விஜய் சேதுபது கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்