அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம் டியர் காம்ரேட். இந்த படம் தெலுங்கு மட்டுமல்லாமல், தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக செலவு செய்து வெளியிடப்பட்டது.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்திருந்தார். பரத் கம்மா என்பவர் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவை சேர்ந்த ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா ஹீரோ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் விஜய்யுடன் நான்கு முன்னணி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ராஸி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரீன் தெரஸா, இசா பெல்லி லெய்ட் ஆகிய நடிகைகள் நடிக்கவுள்ளார்கள்.