Skip to main content

"உன் எண்ணங்களில் மூழ்கி இறந்து போகிறேன்" - விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

vijay antony wife about his daughter meera passed away

 

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் மீரா (16) கடந்த மாதம் 19 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்த போது அவரது இறப்பு உறுதி செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு, சில தினங்களாக மீரா மன அழுத்தத்தில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. இது குறித்து போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

இவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகளின் மறைவு குறித்து கடந்த மதம் 21 ஆம் தேதி விஜய் ஆண்டனி பகிர்ந்த எக்ஸ் பதிவில், "என் மகள் மீரா மிகவும் அன்பானவள்; தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விடச் சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்றிருக்கிறாள்; என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள்; அவளுடன் நானும் இறந்துவிட்டேன்; நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்; அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்" என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

 

இதையடுத்து ரத்தம் படம் கடந்த 6 ஆம் தேதி வெளியான நிலையில், அதன் ப்ரோமோஷனுக்காக வந்திருந்த விஜய் ஆண்டனி தனது இரண்டாவது மகள் லாராவுடன் கலந்து கொண்டார். இந்த நிலையில் மீராவின் மறைவு குறித்து விஜய் ஆண்டனியின் மனைவி தற்போது அவரது எக்ஸ் தள பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், "நீ 16 வருடங்கள் மட்டும் தான் வாழ்வாய் என எனக்கு தெரிந்திருந்தால் எனக்கு மிக அருகில் உன்னை வைத்திருப்பேன். சூரியனுக்கும் சந்திரனுக்கும் கூட உன்னைக் காட்டியிருக்க மாட்டேன். 

 

உன் எண்ணங்களில் மூழ்கி இறந்து போகிறேன், நீ இல்லாமல் வாழ முடியவில்லை. அப்பா அம்மாவிடம் திரும்பி வந்து விடு. லாரா உனக்காக காத்திருக்கிறாள். லவ் யூ தங்கம்" எனக் குறிப்பிட்டு மீராவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.