வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதனிடையே திரைப்படங்களைத் தாண்டி நிறைய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உரையாடுகிறார். அந்த வகையில் ஒரு உணவகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், இறைச்சி குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், “சின்ன வயதில் சாப்பிடும் உணவு தான் அந்த தலைமுறையையே தீர்மானிக்கிறது. எங்க தலைமுறையினர் மற்றும் எங்களுக்கு அடுத்த தலைமுறையினர்களில் உணவால் நிறைய பிரச்சனைகள் உருவாகியிருக்கிறது. உணவுப் பொருளின் தரம், சமையலின் தரம், போன்றவற்றை மறுசீரமைப்புக்கு உட்படுத்தி அதிலிருந்து சரியானதை எடுத்து கொள்ளும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
மனிதனுடைய வளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது இறைச்சி. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இறைச்சி உணவு என்பது மனிதனுடைய அடிப்படை தேவைகளில் ஒன்று. இன்றைக்கு அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக மாறிவிட்டது. நான் நிறைய இறைச்சி சாப்பிடக்கூடிய ஆள்” என்றார்.