Skip to main content

‘நானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன்’ - வரலட்சுமி சரத்குமார்

Published on 28/03/2025 | Edited on 28/03/2025
varalaxmi sarathkumar about her bad experience in child hoog

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் வரலக்‌ஷ்மி சரத்குமார். அந்த வகையில் தமிழில் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான தனுஷின் ராயன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்பு விஷாலுடன் அவர் நடித்த மதகஜராஜா படம் 12 வருடங்களுக்குப் பிறகு வெளியாகியிருந்தது. தெலுங்கில் அவர் நடித்த ‘ஷிவாங்கி லயனெஸ்’(Shivangi Lioness) கடந்த 7ஆம் தேதி வெளியானது.     

இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் தான் சிறுவயதாக இருக்கும் போது தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “என் பெற்றோர் இரண்டு பேருமே வேலைக்கு செல்வார்கள். அதனால் என்னை மற்றவர்கள் வீட்டில் விட்டுவிட்டு பார்த்துக்க சொல்லி செல்வார்கள். அப்போது நான் சிறுவயதாக இருந்ததால் என்னை ஐந்து முதல் ஆறு பேர் துஷ்பிரயோகம் செய்தனர். எனக்கு குழந்தைகள் இல்லை. ஆனால், குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்றுள்ளார். 

வரலட்சுமி 1985ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் மற்றும் சாயா தேவி தம்பதிக்கு பிறந்தவர். இவர் பிறந்து 15ஆண்டுகள் கழித்து சரத்குமாரும் சாயா தேவியும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து நடிகையாக வலம் வந்த வரலட்சுமி கடந்த ஆண்டு தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவினை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.   

சார்ந்த செய்திகள்