Skip to main content

வலிமை ஷூட்டிங் மீண்டும் தொடங்குவது எப்போது..?

Published on 18/04/2020 | Edited on 18/04/2020

அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகிறது ‘வலிமை’ படம். அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 60% சதவிதம் வரை முடிந்துள்ளது.

 

mbj

 

தற்போது கரோனா தொற்று காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், வலிமை படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பீதியால் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முக்கியமான  காட்சிகளைப் படமாக்க நீண்ட ஷெட்டியூல் ஒன்றைத் திட்டமிட்டு, ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால், அனைத்துமே கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளதால், இப்படப்பிடிப்பை ஒரே கட்டமாக கரோனா பாதிப்புகள் முழுவதுமாக முடிந்த பிறகு நடத்திக்கொள்ளலாம் என அஜித் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்