Skip to main content

சமயப் பொதுவுடைமையாளர் பங்காரு அடிகளார் - கவிஞர் வைரமுத்து இரங்கல்!

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Vairamuthu about  Bangaru Adikalar

 

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார் (வயது 82). இவர் மாரடைப்பு காரணமாக நேற்று (19.10.2023) உயிரிழந்தார். அவரது மறைவு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து அஞ்சலி பதிவு ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

அதில் “சமய பீடத்தைச் சமுதாய பீடமாய் மாற்றியவர். அடித்தட்டு மக்களுக்கு அடைத்துக் கிடந்த ஆன்மிகக் கதவுகளை எளியவர்க்கும் மகளிருக்கும் திறந்துவிட்டவர். இறுகிக் கிடந்த ஆன்மிக முடிச்சுகளைத் தளர்த்தியவர் மற்றும் அறுத்தவர். சமயப் பொதுவுடைமையாளர் பங்காரு அடிகளார் மறைவால் துயரமுறும் அத்துணை இதயங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். பீடம் கண்டவரின் பீடு புகழ் நீடு நிலவட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்