Skip to main content

வடிவேலுவிடம் ஒரே வார்த்தையை 10 தடவை சொன்ன முதல்வர்

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

vadivelu about cm praised

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிற 14 ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பின் ட்ரைலரை மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி வெளியிட்டனர். 

 

இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது வடிவேலு பேசுகையில், "படத்தை பார்த்து இரவு 11 மணிக்கு முதல்வர் ஃபோன் பண்ணி, பிரமாதம் பிரமாதம் என பாராட்டினார். மொத்தம் 10 பிரமாதம். இதன் பிறகு இன்னும் நிறைய விஷயம் சொன்னாரு அதை இங்கே சொல்ல முடியாது. 

 

இந்த படம் உதய் சாரின் கடைசிப் படமாக இருந்தாலும் இப்படம் போல் அவருக்கு எந்த படமும் அமையாது. உலக மக்களும் கொண்டாடுகிறார்கள். அப்படிப்பட்ட இப்படத்தில் நான் மட்டும் ஹீரோவா என்று சொல்வது தவறான வார்த்தை. அனைவருமே ஹீரோதான். மெயின் ஹீரோ மாரி செல்வராஜ் தான். அவரின் வயசுக்கு மீறின படம். அனைவரும் கடுமையான உழைப்பை இப்படத்தில் கொடுத்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்