நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கலகத்தலைவன்' படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (10/11/2022) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், மாரிசெல்வராஜ், பிரதீப், சுந்தர்.சி, நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், "ரெட் ஜெயண்ட்-ஓட மேடைக்கு பழகிட்டு இருக்கேன். நல்லா ஞாபகம் இருக்கு பரியேறும் பெருமாள் ஸ்பெஷல் சோ போட்டோம். அதுக்கு முன்னாடி மகிழ் திருமேனி சார பார்த்தது இல்ல. படம் முடிச்சிட்டு நிறைய பேர் வெளிய வரும் போது, உயரமான ஒரு ஆள் வந்து, கம்பீரமான குரல்ல, "மாரி ரொம்ப அழகான நல்ல படம் பண்ணிருக்கீங்க. அப்படியே கையப் பிடிச்சி ஒரு முத்தம் கொடுத்துட்டு போனாரு. அன்னையில இருந்து தான் அவரது படம் பார்க்க ஆரம்பிச்சேன். பயங்கரமான ஆக்ஷன் படமா தான் இருக்கும். ஆனா அமைதி இருக்கும். தனியா உட்கார்ந்து ஒரு நதியைப் பார்த்த மாதிரி, சத்தமெல்லாம் கேட்டுட்டே இருக்கும். ஆனால், அதில் அமைதி இருந்துட்டே இருக்கும். அவருடைய எல்லாப் படத்திலும் அமைதி இருக்கு. வில்லனா இருக்கட்டும், ஹீரோவா இருக்கட்டும், இவங்க இரண்டு பேர் கிட்டயும் அமைதிய ஃபாலோ பண்ணி ஒரு ப்ளே பண்ணுவாரு. ரொம்ப புடிக்கும்.
உதய் சார் லவ் பண்ணும் போது குழந்தை மாதிரி ஆகிடுவாரு. ஆனா நாம லவ்வே வெக்கல. ஏன்னா, குழந்தையா ஆகக் கூடாது மாமன்னன்ல. அப்படின்ட்டு நான் லவ்வே வெக்கல. ஆனா பாக்கும் போது தெரியுது. லவ் வொர்க் அவுட் ஆயிருக்கும்னு தோணுது. அதைப் பார்க்கறதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு.
கடைசியா வாங்க சாருனு... உதய் சார் படம் பண்லாம்னு கூப்பிட்டாரு. ஒரு ரிலேஷன்ஷிப் தொடங்கிட்டு தான் மாமன்னன் ஆரம்பிச்சாரு. பர்ஸ்ட் ஷாட்டே நடிக்க வந்தாரு. வெளிப்படையா சொல்லணும்னா பரியேறும் பெருமாள், கர்ணன்ல ரொம்ப பிரஷரா வொர்க் பண்ணேன். எனக்கு நானே போட்டுக்கிட்ட பிரஷர் தான். புரொடியூசர்ஸ்லாம் கொடுக்கல. ஆனா மாமன்னன்ல அவ்வளோ பிரஷர் எடுத்துக்கல நானு. அது காரணம் ரெட் ஜெயண்ட் தான். கேட்ட எல்லாமே இருந்துச்சு. கேட்ட ஆர்ட்டிஸ்ட் இருந்தாங்க. அவர் நடிச்ச படத்திலேயே அதிக நாள் சூட் பண்ண படம். 'கலகத் தலைவன்'. மாமன்னனுக்கு முன்னாடி வரக்கூடிய பெரிய படமா இருக்கும். மாமன்னனும், கலகத்தலைவனும் வெற்றிப்படமா அமையும்." எனத் தெரிவித்துள்ளார்.