தமிழ் திரையுலகில் நயன்தாரா, காஜல், சமந்தா, கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் கடந்த ஆண்டு ஆதிக்கம் செலுத்தினார். இந்த ஆண்டு இவர்களுக்கு படங்கள் வாய்ப்பு குறைந்துள்ளன. ஆனால், நயன்தாராதான் நம்பர்-1 இடத்தை தக்க வைத்துகொண்டு இருக்கிறார். பெண் சூப்பர் ஸ்டார் என்றே நயனை அழைக்கிறார்கள். பெண் நடிகைகளில் அதிக சம்பளம் பெரும் நடிகை, பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பது போன்று தனித்துவமாக செயல்படுகிறார்.
இந்நிலையில், மற்ற மொழிகளிலும் நயனை போன்று, ஏன் நயனுக்கே முன்னோடி பெண் சூப்பர் ஸ்டார்களாக இருந்த இரு பெண் நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் இந்த வருடம் அறிமுகம் ஆகிறார்கள். மஞ்சு வாரியர், மலையாள சினிமாவின் பெண் சூப்பர் ஸ்டார். இவருடைய படங்களுக்கு என்று தனி மாஸ் உண்டு, ரசிகர்கள் உண்டு. இவர் நடித்த படத்தின் கலெக்ஷன்களும் எகிரும் அளவிற்கு மலையாளத்தில் இருப்பவர் வெற்றிமாறன் இயக்கும் அசூரன் தமிழ் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக ஹிந்தியில் டர்டி பிக்ச்சர் என்று எடுத்தனர். அதில் சில்க் வேடத்தில் நடித்தது வித்யா பாலன். வித்யா பாலன் ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம். நடிப்பிற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர். கஹாணி, துமாரி சுலூ ஆகிய படங்களில் இவருடைய பெர்ஃபார்மன்ஸ் வேர லெவல். தற்போது இவர் அஜித்துக்கு ஜோடியாக பிங்க் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார்.