Skip to main content

'யார் காளான், யார் ஆலமரம்னு காலம் பதில் சொல்லும்...' வெளியானது தலைவி படத்தின் ட்ரைலர்!

Published on 23/03/2021 | Edited on 23/03/2021

 

Kangana Ranaut

 

இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

 

தலைவி படத்தை ஏப்ரல் 23-ஆம் தேதி, திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்