கடந்த வருட ஜனவரி மாதத்தில் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் வெளியானதை அடுத்து தற்போதுவரை எந்த படமும் சூர்யாவிற்கு வெளியாகவில்லை. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். முன்னமே ரிலீஸாக வேண்டிய என்.ஜி.கே படத்திலிருந்து அப்போது எந்தவித அப்டேட்டும் விடாமல் இருந்தார்கள்.
![dev](http://image.nakkheeran.in/cdn/farfuture/LO3lZ6s5L9pUzd0trnCddSraDfkuxlDGAbh-mC6yQxg/1556515995/sites/default/files/inline-images/dev.jpg)
இந்நிலையில் என்.ஜி.கே படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் ட்ரைலரை இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த விஷயம் ட்ரெண்டாகி வந்தது. இது மட்டுமல்லாமல் சூர்யாவின் மகனும் தற்போது ட்ரெண்டாகி வருகிறார். சூர்யா, ஜோதிகா ஜோடிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர்.
![devarattam](http://image.nakkheeran.in/cdn/farfuture/rYergmYLDilKtAdlYR76_HFyjP9l9TbUkX3qT1PL4kI/1556528211/sites/default/files/inline-images/336-x-150-devarattam_2.jpg)
தற்போது தேவ் தேசிய அளவில் ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். 40 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் தண்டர்கேக் பிரிவில் தேவ் வெற்றியடைந்துள்ளார். இதை காண சூர்யா, ஜோதிகா இருவரும் சென்றிருந்தார்கள். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.