Skip to main content

"ஒரு தோல்வி எல்லாவற்றையும் கற்றுத்தரும்" - எஸ். ஜே சூர்யா

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

sj surya talk about Anyas Tutorial web series

 

இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதிஷ் ஆகியோர் ஆன்யா’ஸ் டுடோரியல் என்ற இணைய தொடரில் நடித்துள்ளனர். புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ள இந்த தொடரை ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த வெப் தொடர் ஜூலை 1ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் ஆன்யா’ஸ் டுடோரியல் குழுவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் ரெஜினா, நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர் சுந்தர் சி, எஸ்.ஜே சூர்யா, விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

இதில் பேசிய எஸ்.ஜே சூர்யா, "அல்லு அரவிந்த்  வேகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய குழுவும், திறமைமிக்க ஆட்கள் நிறைந்த குழுவாக இருக்கிறார்கள். முருகதாஸ் சார் டீமில் உள்ள எனர்ஜிடிக்கான நபர் பல்லவி. அவர் இயக்கிய தொடரின்  விழாவிற்கு நான் வந்தது எனக்கு பெருமையான விஷயம். ரெஜினா எப்போதும் தன்னுடைய அழகையும், திறமையும் தொடர்ந்து கச்சிதமாக தக்கவைத்து கொண்டுள்ளார். நிவேதிதா, ரெஜினா கஸண்ட்ரா  இருவரும் இந்த தொடருக்கு பொருத்தமான தேர்வு, இருவரது முக அமைப்பும் சகோதரிகள் போல் அப்படியே இருக்கிறது.

 

எழுத்தாளரைத் தமிழுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி பேயைப் பார்க்க ஆசை என்றார். ஒரு படம் எடுத்துத் தோல்வியடைந்தால், எல்லா பேயையும் பார்த்து விடலாம். ஒரு தோல்வி எல்லாவற்றையும் கற்றுத்தரும். பாகுபலி போன்ற படைப்பை எடுத்த ஒரு நிறுவனம், தமிழில் ஒரு சீரிஸ் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது.  திறமை வாய்ந்த நபர்கள் இணைந்து இந்த தொடரை உருவாக்கி இருப்பது மகிழ்ச்சி" என்றார். 

 

சார்ந்த செய்திகள்