Skip to main content

பிரபல ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயன் திரைப்படம் '.... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

sivakarthikeyan don movie ott release june10

 

'டாக்டர்' படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த படம் டான். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி,சூரி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடினர். மேலும் இப்படத்தை பார்த்த ரஜினி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில் டான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டான் திரைப்படம் வரும் ஜூன் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியான இப்படம் இது வரை 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்