Skip to main content

“ஹீரோவை ரவுடியாக காட்டவில்லை” - சைரன் பட இயக்குநர்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

siren movie director speech

 

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில்  ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. ஜி.வி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதைப் பார்க்கையில் பரோலில் வெளிவந்த ஒரு கைதியை பற்றி சொல்வது போல் அமைந்துள்ளது.  

 

இந்த நிலையில் இப்படம் பற்றி இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் பேசுகையில், “இந்த படத்தில் அரசியல் இருக்காது. எல்லா விஷயங்களிலும் அரசியல் இருப்பது போல இந்த கதையிலும் அரசியல் இருக்கும். மற்றபடி நேரடியாக அரசியல் பேசியிருக்க மாட்டோம். ஹீரோவை ரவுடியாக காட்டவில்லை. படத்தில் சோசியல் மெசெஜ் மாதிரி ரெண்டு மூணு விஷயங்கள் பேசியிருக்கோம். அது திணித்தது போல் இருக்காது. டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

ரசிகர் மரணம் - வீட்டுக்குச் சென்று ஜெயம் ரவி ஆறுதல்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
jayam ravi condolence to his fan passed away

சென்னை எம்.ஜி.ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்தவர் ராஜா (வயது 33). சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

ராஜாவின் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜா வீட்டுக்குச் சென்று, ராஜாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தார். மேலும் ராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். 

ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளர்.