Skip to main content

60 வயது மூதாட்டியின் ஆசை - உடனடியாக நிறைவேற்றிய ஷாருக்கான்

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

Shah Rukh Khan fulfills 60-year-old cancer patient desire

 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஷிவானி சக்ரபோர்த்தி. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் ஷாருக்கானின் தீவிர ரசிகர். அவரை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்பதை வாழ்நாள் ஆசையில் ஒன்றாக வைத்துள்ளார்.

 

இத்தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ, ஷாருக்கான் காதுக்கும் இத்தகவல் சென்றுள்ளது. உடனடியாக அந்த மூதாட்டிக்கு வீடியோ கால் மூலமாக சர்ப்ரைஸ் செய்து அவரின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றி உள்ளார் ஷாருக்கான். அப்போது, அப்பாட்டியின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். அவருடன் 40 நிமிடம் பேசியுள்ள ஷாருக்கான் அவரை நேரில் வந்து பார்ப்பதாகவும் கூறினார். ஷாருக்கானின் இந்த செயல் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

 

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 'டன்கி' படத்தில் நடிக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரிஹானா கலை நிகழ்ச்சியும் ஷாருக்கானின் டான்ஸும் - வைரலாகும் வீடியோ

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
rihanna sharukhan anandh ambani wedding dance video

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடக்கிறது. குஜராத் ஜாம் நகரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, சானியா நேவால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் பிரபலங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இயக்குநர் அட்லீயும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டுள்ளார். 

இவர்களோடு பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்துகொண்டுள்ளார். அவரது கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மேலும் இரவு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பாலிவுட் நட்சத்திரங்களோடு நடனமாடினார். ஜான்வி கபூருடன் அவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் நிகழ்ச்சியில் ஷாருக்கான் ஆடிய வீடியோவும் வைராகி வருகிறது.  

பாப் பாடகி ரிஹானா கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அனுபவத்தை சொல்லும் ராஜ்குமார் ஹிரானி - ஷாருக்கானின் 'டங்கி'

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Shah Rukh Khan, Rajkumar Hirani in Dunki second trailer released

 

பிரபல இந்தி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் படம் 'டங்கி'. இதில் டாப்ஸி, போமன் இரானி மற்றும் விக்கி கௌஷல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரிக்கும் இப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற 21 ஆம் தேதி வெளியாகிறது. 

 

இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வரை 64 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூட்யூபில் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முன்னோட்டத்தில், பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்று நண்பர்கள் மனோ, சுகி, புக்கு, மற்றும் பாலி ஆகியோர் அடங்கிய லண்டனுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கனவைக் கொண்ட குழுவை ஷாருக்கான் கதாபாத்திரம் சந்திக்கிறது. பின்பு வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நான்கு நண்பர்களைப் பின்தொடர்ந்து இந்தக் கதை செல்கிறது. ஏற்கனவே இப்படத்தின்  ஒரு ட்ரைலரும் இரண்டு பாடல்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.