Skip to main content

குணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

Sanam Shetty helps actress undergo cancer surgery

 

‘பிக் பாஸ்’ புகழ் சனம் ஷெட்டி. இவர், சமீபத்தில் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிந்து என்ற குணச்சித்திர நடிகைக்கு உதவும் நோக்கத்தில் தனது சமூகவலைதளப் பக்கங்களில் ரசிகர்களிடம் உதவிகேட்டார். சிந்துவும், தனக்கு ஏற்பட்ட மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொள்ள பணம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில், அவருக்கு சனம் ரசிகர்களும் உதவவே சிந்துவிற்கு ஆபரேஷன் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. பின்னர், இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் சனம் ஷெட்டி பதிவு வெளியிட்டிருந்தார். குணச்சித்திர நடிகை சிந்து 'அங்காடி தெரு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இந்நிலையில், புற்றுநோய் கண்டறியப்பட்டு, அவருக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சைக்குப் பிறகும் புற்றுநோய் பரவியுள்ளது. இதனால், தற்போது அடுத்தகட்ட சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

 

சிந்து, புற்றுநோயில் இருந்து பூரண குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்