Skip to main content

புது அவதாரம் எடுத்த சமந்தா

Published on 11/12/2023 | Edited on 17/03/2025
samantha starts new production house

சமந்தா சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார் சமந்தா. தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அது பூரண குணமடைய தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.  இப்போது கைவசம் 'சிட்டாடெல்' வெப் தொடர் வைத்துள்ளார். இதன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், சமந்தா தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார். டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் புது சிந்தனையுள்ள கதைகள் மற்றும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பேசும் கதைகளை ஊக்குவிக்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்