Skip to main content

சல்மான்கானைத் தென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்தும் மோகன் ராஜா

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

Salman Khan act with Chiranjeevi Godfather film

 

மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'லூசிஃபர்' படம் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி வெற்றிபெற்றது. நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான இப்படம், பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை மோகன் ராஜா இயக்கி வருகிறார். நடிகர் ராம்சரண், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடித்து வருகிறார். 'காட்ஃபாதர்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் நடிக்கவுள்ளார். இதற்காக முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சல்மான்கானை பூங்கொத்து கொடுத்து நடிகர் சிரஞ்சீவி வரவேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படத்தில் மலையாளத்தில் பிரித்விராஜ் ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சால்மன் கான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நடிகர் சல்மான்கான் முதல் முறையாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்த படத்திற்கு தமிழ் இயக்குநரைத் தேர்ந்தெடுத்த சல்மான் கான்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
salman khan next with ar murugadoss

ரஜினியின் தர்பார் படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் 23ஆவது படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ். இப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தை அடுத்து ஏ.ஆர் முருகதாஸ், பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து படமெடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட ஹீரோக்களை இயக்கிய ஏ.ஆர் முருகதாஸ் மற்றொரு முன்னணி நடிகரான சல்மான் கானை இயக்கவுள்ளார். இப்படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ், “மறக்க முடியாத சினிமா அனுபவத்திற்கு தயாராகுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.  

முதல் முறையாக இருவரும் கூட்டணி வைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான், கடைசியாக டைகர் 3 படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக 1 வருடத்திற்கும் மேலாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அப்படம் குறித்த அப்டேட் இன்னும் வெளியாகாத சூழலில் சர்ப்ரைஸாக ஏ.ஆர் முருகதாஸ் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Next Story

18 வருடம் கழித்து மீண்டும் முன்னணி நடிகருக்கு ஜோடியான த்ரிஷா

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
trisha joined in chiranjeevi Vishwambhara

த்ரிஷா தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் ஐடென்டிட்டி, மோகன்லாலின் 'ராம் பார்ட் 1' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படி தொடர்ந்து தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் 156வது படத்தில் இணைந்துள்ளார். வசிஷ்டா இயக்கும் 'விஷ்வாம்பரா' படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார். யுவி க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த பொங்கலன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அடுத்த வருடம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இப்படம் மூலம் 18 வருடங்கள் கழித்து மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட த்ரிஷா, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு ஸ்டாலின் படத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் சிரஞ்சீவி, த்ரிஷாவிற்கு ஆதரவாக மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.