Skip to main content

அமெரிக்க அதிபரிக்கு எதிராக மேடையில் குரல் கொடுத்த பிரபல நடிகர்!

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

அமெரிக்காவின் பிரபல திரைப்பட விருது நிகழ்ச்சிகளில் ஒன்று ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் அவார்ட்ஸ் நிகழ்ச்சி. இது நேற்று முன் தினம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் லியானார்டோ டிகாப்ரியோ, பிராட் பிட், ஆக்கின் பீனிக்ஸ், அல் பாசினோ, ராபர்ட் டி நீரோ, ஆடம் ட்ரைவர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அப்போது ராபர்ட் டி நீரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. அந்த விருதை லியோ, ராபர்ட் டி நீரோவுக்கு வழங்கினார்.
 

robert de niro

 

 

அப்போது விருதை பெற்றுக்கொண்டு பேசிய நடிகர் ராபர்ட் டி நீரோ,  “சமீபகாலங்களில் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான போக்கு அதிகரித்துள்ளது. போராடுபவர்களை ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள் கட்டுப்படியாகக்கூடிய பராமரிப்புச் சட்டம், சமமான வரிகள், மனிதாபிமானத்தோடு கூடிய குடியேற்ற விதிமுறைகள், பாதுகாப்பான சூழல், துப்பாக்கிளுக்குக் கட்டுப்பாடு மற்றும் நியாயமான ஊதியங்கள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றையும் ஆதரிக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது. நாம் அவர்களுக்கு நமது ஆதரவையும் வாக்குகளையும் அளிக்க வேண்டும்.

சிலர் என்னிடம் அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என்று சொல்கின்றனர். ஆனால், நாம் இப்போது இருக்கும் சூழல் மிகவும் மோசமானதாக இருக்கிறது. இது எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும் மிகுந்த கவலையைத் தருகிறது. இதனால் நான் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன். ஒரு குடிமகனாக என்னுடைய கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உள்ளது. அதிகார மீறல் எங்கு நடந்தாலும் அதற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்