Skip to main content

விஜய் - அட்லீ படத்தில் கீதா கோவிந்தம் நாயகி ? ராஷ்மிகா போட்ட தெறி ட்வீட் ! 

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
rashmika

 

 

 

விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கின்றனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் எளியமுறையில் நடைபெற்று படத்தின் செட் அமைக்கும் பணிகள் ஆரம்பித்தது. இந்நிலையில் படத்தில் யார் நாயகியாக நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில்  ‘கீதா கோவிந்தம்’ தெலுங்கு படத்தில் நடித்த ராஷ்மிகா தான் ‘தளபதி 63’ படத்தின் ஹீரோயின் என சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டு எதிர்பார்ப்பை எகிற செய்த சில நிமிடங்களில் நடிகை ராஷ்மிகா அந்த ட்வீட்டுக்கு கீழே, "டேய்.. எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா.."என நகைச்சுவையாக பதிவிட்டு எதிர்பார்ப்பிற்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்