விஸ்வாசம் படத்தின் ஹிமாலய வெற்றியை அடுத்து நடிகர் அஜித், எச். வினோத் இயக்கத்தில்‘நேர்கொண்ட பார்வை’என்ற படத்தில் நடித்தார். அது பிங்க் என்னும் ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. அஜித்தின் படங்கள் வழக்கமாக ஆந்திராவில்தான் ஷூட்டிங் எடுக்கப்படும் அதுபோல இப்படமும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் மிகவும் குறைவான நாட்களிலேயே எடுத்து முடிக்கப்பட்டது.
மேலும் இந்த படத்தில் அஜித்துடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரங்கராஜ் பாண்டே அஜித்துடன் இருபது நாட்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த பிளான் என்ன என்று ரங்கராஜ் பாண்டே தன்னுடைய யூ-ட்யூப் சேனலில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ அஜித்திற்கு அரசியலுக்கு வருவதற்கான ஆர்வம் இல்லை, ஆனால் அரசியல் பற்றியான ஆழ்ந்த சிந்தனை இருக்கிறது. அவருடைய அடுத்த பிளானாக என்னவாக இருக்கிறது என்றால். இளைஞர்களுக்கான ஒரு மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றை தொடங்க வேண்டும் என்பதாகதான் இருக்கிறது. அது கண்டிப்பாக உலகம் தரம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை” என்று கூறியுள்ளார்.
முன்னதாக நடிகர் அஜித் சென்னை அண்ணா பல்கலைகழக ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் டக்ஷா குழுவுக்கு வழிநடத்துபவராக அஜித் செயல்பட்டார். அக்குழு உலகளவில் தங்களுடைய கண்டுபிடிப்பை கொண்டுசேர்த்தது குறிப்பிடத்தக்கது.