ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை(10.10.2024) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை வரவேற்க ரஜினி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில்அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பிரம்மாண்ட கார் பேரணி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் இடம்பெற்றன. மேலும் ரஜினிக்கு 100 அடி கட்-அவுட்டும் உருவாக்கி திறக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்திற்கு சிறப்பு காட்சி வழங்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில் அதற்கு நாளை(10.10.2024) ஒரு நாள் மட்டும் ஒரு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.