
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் திருமணம் கடந்த மாதம் 3ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு எஸ்.பி.வேலுமணி அழைப்பு விடுத்திருந்தார். மேலும் திரைப்பிரபலம் ரஜினிக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ரஜினியால் பங்கேற்கமுடியவில்லை. இதற்கு படப்பிடிப்பு காரணம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினி சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளார். அவரை பூங்கொத்து கொடுத்து எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். பின்பு அங்கு இருந்த புதுமண தம்பதி விஜய் விகாஸ் - தீக்ஷனா ஆகியோருக்கு ரஜினி திருமண வாழ்த்து தெரிவித்தார். மேலும் ராகவேந்திரா படத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.