![Pushpa Actor jagadeesh Arrested regards actress passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/7o9HiYzseFBB805TpEPt3ryvphTvz6qF1wZQHzMdLEY/1701947228/sites/default/files/inline-images/177_30.jpg)
தெலுங்கில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த துணை நடிகை ஒருவர் கடந்த 29 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் யாரோ ஒருவருடைய தூண்டுதலின் பெயரால் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் நடிகர் ஜெகதீஸ்தான் அந்த துணை நடிகையை மிரட்டி வந்ததாக அறியப்பட்ட நிலையில், அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் கேசவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்.
இவரும் அந்த துணை நடிகையும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். பின்பு இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து அந்த துணை நடிகை வேறோரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு உறவில் இருந்துள்ளார். அப்போது அவருடன் நெருக்கமாக இருக்கும் பொழுது ஜெகதீஸ் அதை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் கசிய விடுவேன் என துணை நடிகையை மிரட்டி வந்துள்ளார். இதன் அழுத்தம் காரணமாகவே துணை நடிகை தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.