Skip to main content

வெற்றிமாறன் கை காட்டும்  நபருக்குதான் வாய்ப்பு - பிரபல தயாரிப்பாளர் அறிவிப்பு 

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

producer s thanu said vetrimaaran telling person will given chance

 

'பொல்லாதவன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன் முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இதைத் தொடர்ந்து அவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக இருந்து வருகிறார். இவர் சினிமாவைத் தாண்டி சமூக நலத்திட்டங்களையும் செய்து வருகிறார். 

 

அந்தவகையில் இயக்குனர் வெற்றிமாறன் "நாம் அறக்கட்டளையின் சார்பாக திரை - பண்பாடு ஆய்வகத்தைத் தொடங்கியுள்ளார். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு நுழைவு தேர்வு வைத்து அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, உண்மையிலேயே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பொருளாதாரத்தில்  பின்தங்கிய நிலையில் விளிம்பு நிலை மனிதர்களாக, முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா, தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ, மாணவிகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத்துறையில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்த நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் .

 

இந்நிறுவனத்தின் தொடங்க நிகழ்ச்சியின் போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு முதல் நபராக ஒரு கோடி ரூபாய் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேலிடம் கொடுத்தார். மேலும் இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களில் வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்கு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் படத்தை இயக்கும் வாய்ப்பு தரப்படும் என்று அறிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்