ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் ரூ.50 கோடியைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளிலும் வெளியாகவுள்ளது. மேலும், படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் ரஜினி, சிம்பு, வசந்தபாலன் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளைப் படக்குழுவிற்குத் தெரிவித்தனர்.
இந்நிலையில், ட்விட்டரில் பிரதீப் ரங்கநாதனிடம் நடிகர் பிரேம்ஜி, "சார், தயவு செய்து உங்க அடுத்த படத்தில் எனக்கொரு வாய்ப்பு கொடுங்க சார்" எனக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பிரதீப் ரங்கநாதன், "சார்... மிக்க நன்றி. இதைப் பகிர பெரிய மனம் வேண்டும். உங்கள் டயலாக்கை உங்களை சொல்ல வைக்க விரும்புகிறேன். என்னக் கொடும சார் இது..." எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பிரேம்ஜியும் ஓகே எனச் சொல்லியிருக்கிறார்.
இதனிடையே பிரதீப் ரங்கநாதன், கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் வசந்த், சித்தார்த், பிரேம்ஜி, வெங்கட்பிரபு உள்ளிட்ட சிலருக்கு தனது குறும்படத்தை விளம்பரப்படுத்தச் சொல்லிக் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த ஸ்க்ரீன்ஷாட்டையும் ரசிகர்கள் பகிர்ந்து பிரதீப் ரங்கநாதனின் வளர்ச்சியைப் பாராட்டி வருகின்றனர். பிரதீப் ரங்கநாதன் நிறையக் குறும்படங்களை இயக்கியுள்ளதும் அதில் ஒன்றான 'அப்பா லாக்' குறும்படத்தைத் தழுவித்தான் 'லவ் டுடே' படம் உருவானதும் கூடுதல் தகவல்.
Sirrrr… Thankyou so much . It takes a lot of heart to post this . Means a lot . I want to make you say “Enna koduma sir idhu 😄❤️❤️❤️❤️” https://t.co/SA1SofB5Q0— Pradeep Ranganathan (@pradeeponelife) November 17, 2022