Skip to main content

'பொன்னியின் செல்வன்' படத்தில் யார் யார் எந்தெந்த வேடம்? லிஸ்ட் உள்ளே!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021
hdfjdfnjdf

 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

லைகா தயாரிப்பில் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில், இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார், எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்ற பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்...

 

"சுந்தர சோழர் - பிரகாஷ்ராஜ்
ஆதித்ய கரிகாலன் - விக்ரம்
அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவி
வந்தியத் தேவன் - கார்த்தி
குந்தவை - த்ரிஷா
நந்தினி - ஐஸ்வர்யா ராய்
பூங்குழலி - ஐஸ்வர்யா லட்சுமி
வானதி - ஷோபிதா
பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார்
சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்
கடம்பூர் சம்புவரையர் - நிழல்கள் ரவி
மலையமான் - லால்
ஆழ்வார்க்கடியான் நம்பி - ஜெயராம்
அநிருத்த பிரம்மராயர் - பிரபு
சோமன் சாம்பவன் - ரியாஸ் கான்
ரவிதாசன் - கிஷோர்
சேந்தன் அமுதன் - அஸ்வின்
கந்தன் மாறன் - விக்ரம் பிரபு
மதுராந்தகன் - அர்ஜுன் சிதம்பரம்
பார்த்திபேந்திர பல்லவன் - ரஹ்மான்
குடந்தை ஜோதிடர் - மோகன்ராம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்