Skip to main content

'பொன்மகள் வந்தாள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

ffu

 

'தம்பி' படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் படம் 'பொன்மகள் வந்தாள்'. புதுமுக இயக்குனர் ஜே.ஜே. பிரிட்டோ இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிக்கப்பட்டு இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் 'பொன்மகள் வந்தாள்' படம் மார்ச் 27- ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கரோனா காரணமாகத் திரையுலகம் முடங்கியுள்ளதால் ரிலீசுக்குத் தயாராகவுள்ள படங்களை ஓ.டி.டி. நிறுவனங்கள் நேரடி டிஜிட்டல் ரிலீசுக்காகக் கைப்பற்றி வருகின்றன. அந்த வகையில் 'பொன்மகள் வந்தாள்' படத்தை அமேசான் பிரைம் சமீபத்தில் கைப்பற்றியது. இந்நிலையில் இப்படம் வரும் மே 29- ஆம் தேதி வெளியாகிவுள்ளதாக அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு '96' புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்