Skip to main content

பிரதமர் மோடி எழுதிய பாடல் வெளியீடு

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

PM Modi penned Navratri special 'Garbo' song released

 

ஆண்டுதோறும் இந்து மக்களால் கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி பண்டிகை, இந்தாண்டு நாளை (15.10.2023) முதல் துவங்குகிறது. இதையொட்டி பிரபல பாலிவுட் பாடகி த்வனி பனுஷாலி (Dhvani Bhanushali) 'கார்போ' (Garbo) என்ற தலைப்பில் ஒரு ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார். அந்த பாடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரிகள் எழுதியுள்ளார். 

 

இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. த்வனி பனுஷாலி குரலில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார். இப்பாடல் கலாச்சார பன்முகத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. பிரதமர் மோடியுடன் பணியாற்றியது குறித்து பேசிய இப்பாடலின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி, "மோடியுடன் பணியாற்றியது எனக்கு பெருமை" என கூறியுள்ளார். 

 

மேலும் பாடகி த்வனி பனுஷாலி, மீண்டும் மோடியுடன் ஒரு புது பாடலுக்கு கூட்டணி அமைக்க விரும்புவதாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்