Skip to main content

“என் படத்தை லவுட்டி என்னையே நடிக்க வச்சுட்டாங்க!” - அயோக்யா குறித்து பார்த்திபன்

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

நடிகர் விஷால் மற்றும் பார்த்திபன் நடிப்பில்  ‘அயோக்யா’படம் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இது 'டெம்பர்' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.
 

parthiban

 

இப்படம் குறித்து பார்த்திபன் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில்,  “அயோக்கியா'த்த்தனம்!, 94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே' படத்தை In & out லவுட்டி 'Temper' (Rights பெறாமல்) தெலுங்கில் ஹிட்டாக்கி தமிழிலும் தற்போது! அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு 'அ-தனம்'? குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
 

இதனையடுத்து இப்பதிவு சர்ச்சையை கிளப்பி, சமூக வலைதளத்தில் வைரலானது. தற்போது இந்த ட்விட்டிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மேலும் இரண்டு பதிவுகளை பதிவு செய்துள்ளார் பார்த்திபன்.  அதில், “ஒப்பீட்டால் ரிப்பீட்டாகும் ரசிகர்கள். 'அயோக்கியா'-என் பதிவு ஒரு விளம்பர யுத்தி என்பதை யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை! 'டெம்பர்'வரும்போது தெரியாது, தமிழாகும் போது தெரியும்.இதை கூடிப்பேசி கூத்தடிப்போம் ஷுட்டிங் ஸ்பாட்டில். விஷாலுக்கும் எனக்கும் என்றுமே பிரச்சனை இல்லை. இப்போதும் வழக்காட வரவில்லை. வழக்கமான என் (100%உண்மையான) அக்மார்க் அக்குறும்பே. கெட்ட போலீஸ்,ஒரு நல்ல போலீஸால் திருந்துவதன் விளை(யும்)வுகள்! இந்த மையக் கரு இரண்டிலும் ஒன்றே! சந்தேகம் என்றால் பாருங்கள்” என்று  கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்