இயக்குனர் செல்வராகவனுடன் சூர்யா இணைந்து பணிபுரியும் படம்தான் என்,.ஜி.கே. இத்திரைப்படம் கடந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் படம் தள்ளிப்போய் வருகிற மே 31ஆம் தேதிதான் உலகம் முழுவதும் இத்திரப்படம் வெளியாக உள்ளது.
![ngk](http://image.nakkheeran.in/cdn/farfuture/BQwZ2wLTY_UzapuosF20vXvPrrfwC4A_K_DHPkLL3IA/1556195962/sites/default/files/inline-images/ngk_1.jpg)
கடந்த வருட ஜனவரி மாதத்தில் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் வெளியானதை அடுத்து தற்போதுவரை எந்த படமும் சூர்யாவிற்கு வெளியாகவில்லை. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். முன்னமே ரிலீஸாக வேண்டிய என்.ஜி.கே படத்திலிருந்து அப்போது எந்தவித அப்டேட்டும் விடாமல் இருந்தார்கள்.
சிலர் என்.ஜி.கே படம் ட்ராப்பாகிவிடும் என்று வதந்திகளை பரப்பினார்கள். இந்த படம் நின்ற வேளையில், கே.வி. ஆனந்துடன் இணைந்து காப்பான் என்று ஒரு படத்தில் பணிபுரிந்து வந்தார். சூர்யா தற்போது இவ்விரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. என்.ஜி.கே படத்தின் டீஸர், ஒரு பாடல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த படத்தின் ட்ரைலரும், முழு ஆடியோவும் வெளியிடும் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. அறிவித்ததை அடுத்து சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் என்.ஜி.கேவை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
சூர்யா இவ்விரு படங்களை முடித்துவிட்டு, அடுத்தடுத்து நடிக்க இருக்கும் இரண்டு படங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. சொல்லப்போனால் இந்த மாதத்தில் மட்டும் பல அப்டேட்கள் சூர்யா படங்களில் இருந்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.