அடூர் கோபாலகிருஷ்ணன், மலையாளத்தில் பல படங்களை இயக்கி பல முறை தேசிய விருதுகளை வாங்கியவர். திரைப்படங்கள் மட்டுமல்லாது பல ஆவணப் படங்களையும் இயக்கி பிரபலமானவர். இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜான் ஆப்ரஹாம் நினைவு விருது வழங்கும் விழா கேரளாவில் நடந்தது. இந்த நிகழ்வை அடூர் கோபாலகிருஷ்ணன் தொடக்கி வைத்து பேசினார்.
இது குறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், "தேசிய விருது குழுவில் இந்தி பட ரசிகர்கள் தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விருதுக்கு தேர்ந்தெடுக்கும் படங்களுக்கு என்ன அளவு கோல் என்று கூட தெரியவில்லை. தேசிய விருது இப்பொழுது மோசமான நகைச்சுவையாக மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் நாட்டின் புகழ்பெற்ற இயக்குநர்கள், விமர்சகர்கள் மற்றும் கலைஞர்கள் நடுவர்களாக இருந்தார்கள். தற்போது சிறந்த படங்களுக்கு விருது இல்லை, பிளாக்பஸ்டர் படங்களுக்கு தான் கொடுக்கப்படுகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த 68-வது தேசிய விருது விழாவில் சூரரைப் போற்று (5), சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (3), மண்டேலா (2) உள்ளிட்ட படங்கள் என மொத்தம் தமிழ் படங்கள் 10 விருதுகளும், மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் (3), மாலிக் (1) போன்ற படங்கள் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.