ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பொழுது, அந்தப் பகுதி மக்களுடன் சேர்ந்து வித்தியாசமான முறையில் எதையாவது செய்து வைரலாவது வழக்கம். அந்த வகையில் முன்னதாக கபடி விளையாடியது, நடனம் ஆடியது, ஆட்டோ ஓட்டியது உள்ளிட்ட ரோஜாவின் செயல்கள் வீடியோவாக வெளியாகி வைரலானது.
இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் 51வது பிறந்தநாள் அக்கட்சியினராலும் தொண்டர்களாலும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அமைச்சர் ரோஜா கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து, பம்பாய் காலனி பகுதிக்குச் சென்று, அங்கு போலியோவால் பாதிக்கப்பட்ட செருப்பு தைக்கும் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் அக்குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி மகிழ்ந்தார். அதோடு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மனைவியின் மருத்துவச் செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கினார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.