Skip to main content

'பொன்னியின் செல்வன்' ; "மாபெரும் ராஜ ராஜ சோழா..." ஜெயம் ரவியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

maniratnam 'ponniyin selvan' movie jayam ravi first look poster released

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'.  'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

 

இதனிடையே 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோரின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஜெயம் ரவியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி ஜெயம் ரவி இப்படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை படக்குழுவினர் அனைவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து "இளவரசர், பொற்காலத்தின் கட்டிடக்கலைஞர், மாபெரும் ராஜ ராஜ சோழா..." என குறிப்பிட்டுள்ளனர். இப்படத்தின் டீசர் இன்று (08.07.2022) மாலை 6 மணிக்கு ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்