Skip to main content

அமைதியை சீர்குலைக்கும் படத்தை பிரதமர் ப்ரொமோட் செய்வதா..? - மல்லிகார்ஜுன கார்கே கடும் விமர்சனம்

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

Mallikarjun Kharge comments kashmir files film

 

பிரபல இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம்  ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்தன. அதன் பின்பு பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே கடந்த 11ஆம் தேதி இப்படம் வெளியானது.

 

மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாஜக ஆளும் ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிலரும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை ப்ரொமோட் செய்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே இப்படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “இந்தப் படம் ஒருதலை பட்சமாக எடுக்கப்பட்டுள்ளது. உண்மைகளை மறைத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சமுகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார். இந்த மாதிரியான படத்தை பிரதமர் மோடி ப்ரொமோட் செய்கிறார். நானும் 55 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஆனால் எந்தப் பிரதமரும் இப்படிப்பட்ட ஒரு படத்தை ப்ரொமோட் செய்தது கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்