கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளாவில் ஓடும் காரில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வந்த திலீப் வழக்கின் சாட்சியங்களை அழிக்க முற்பட்டதாகவும், விசாரணை அதிகாரியை மிரட்டியதாகவும் திலீப் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 5 ஆண்டுகளாக கேரளா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையை கடந்த மே 31-ஆம் தேதிக்குள் காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே விசாரணை குழு கூடுதல் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதிக்குள் இந்த வழக்கை முடிக்க அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.