Skip to main content

நடிகர் சூரி தொடர்ந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்

Published on 04/02/2022 | Edited on 05/02/2022

 

madras High Court has new order Suri's case against the former DGP

 

நிலமோசடி தொடர்பாக, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டி.ஜி.பி. ஆகிய ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோருக்கு எதிராக அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரி புகார் அளித்தார். அந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றக்கோரி, நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

இந்நிலையில் இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (4.2.2022) விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்வதோடு, வழக்கு விசாரணையை 6 மாத காலத்திற்குள் நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மேக்கிங் தேவையில்லை; எமோஷனே போதும்” - வெற்றி குறித்து சூரி    

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
soori speech at samuthirakani Ramam Raghavam Teaser launch

சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானியே இப்படத்தை இயக்கியும் உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த டீசர் விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது சூரி பேசுகையில், “வெண்ணிலா கபடி குழு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த போது என்னுடைய கேரக்டரில் நடித்து, இங்கு என்னைவிட அங்கு அதிக வரவேற்பை பெற்றவர் தனராஜ். அப்போது முதல் என்னுடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம் எனக்கு ஃபோனில் பண்ணி பேசுவார். நிமிர்ந்து நில் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது கூட நிறைய பேசுவோம். நான் பேசுவது அவருக்கு புரியாது, அவர் பேசுவது எனக்கு புரியாது. விடுதலை பார்த்துவிட்டு அரை மணிநேரம் பேசினார். டைரக்டர் எல்லாம் நடிகராக மாறிவரும் காலத்தில் ஒரு காமெடி ஆக்டர் டைரக்டராகி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.  

காமெடி நடிகரா ஒரு கூடுதல் நன்மை என்னவென்றால், ஹீரோவை விட அதிக படங்களில் நடித்திருப்போம். அதனால் நிறைய டைரக்டர்களுடன் வேலை பார்த்திருப்போம். அவர்களிடமிருந்து எதாவது ஒன்று தனராஜ் கத்துக்கிட்டு இருப்பார். அதை எல்லாமே இந்த படத்தில் பதிவு செய்திருப்பார் என நம்புறேன். பொதுவாக அப்பா மகன் கதையென்றால், மேக்கிங் பெரிதாக தேவையில்லை. இருவருக்கும் இடையிலான எமோஷன்களை சரியாக பதிவு செய்தால் போதும். அப்படி பதிவு செய்த படங்கள் தோற்றதில்லை. உதாரணத்திற்கு அப்பா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, யாரடி நீ மோகினி, முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு என சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் இந்த படத்திலும் அப்பா மகன் எமோஷனை நன்றாக காட்டியிருப்பது போல் தெரிகிறது. அதனால் இந்த படமும் தோற்காது. சமுத்திரக்கனியை உண்மையான ஹீரோ என அவரிடம் பழகும் நிறைய பேர் சொல்வார்கள். அந்த வகையில் எனக்கும் அவர் ஹீரோ மாதிரி தான். எப்போதுமே பாசிட்டிவாக இருப்பார்” என்றார். 

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.