Skip to main content

பாடகி சின்மயிக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து மகன்!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

vsgfagasv

 

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஓ.என்.வி விருதுக்கு கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விருதை மலையாளி அல்லாத கவிஞர் ஒருவர் பெறுவது இதுவே முதல்முறை. விருதுபெறும் வைரமுத்துவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவந்த நிலையில், மலையாளம் சினிமா உலகில் இதற்கு எதிர்ப்புகள் அதிகரித்துவந்தன. இதற்கிடையே கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து மீடூ புகார் தெரிவித்துவரும் பாடகி சின்மயியும் ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், கவிஞர் வைரமுத்துவை தன் திருமணத்திற்கு அழைக்கச் சொல்லி டார்ச்சர் செய்ததே அவர் மகன்தான் என சின்மயி கூறியுள்ளார். 

 

இந்நிலையில் இதற்கு வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி பதிலளித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...“இது அவர் சொல்லும் மேலும் ஒரு பொய். அவர் என் தந்தையைத் தன் திருமணத்திற்கு அழைக்க விரும்பினார். ஆனால், என் தந்தை அவர் மீது அதிருப்தியில் இருந்ததால், அபாயின்ட்மென்ட் கொடுக்க மறுத்துவிட்டார். அதனால் அவரிடம் அபாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார். நானும் வாங்கிக் கொடுத்தேன். அவரின் வீட்டிற்கு சின்மயி தனியாக சென்று, என் தந்தையின் பாதங்களை தொட்டு ஆசி வாங்கி திருமணத்திற்கு வரவேற்றார்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யுவன் - மதன் கார்க்கி கூட்டணியில் வெளியாகும் காதல் பாடல்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Yezhu Kadal Yezhu Malai first single release update

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்திருந்தார்.

இப்படத்தின் முதல் பாடல் வருகின்ற காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ‘மறுபடி நீ...’ என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளதாகப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடல் காதல் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பிரியாணி, அஞ்சான், வை ராஜா வை, மாநாடு உள்ளிட்ட சில படங்களில் யுவன் இசையில் மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார்.  

Next Story

“இந்தியாவை ஓர் ஒற்றை மொழிமட்டும் கட்டியாள முடியுமா?” - கேள்வியெழுப்பும் கவிஞர் வைரமுத்து

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Vairamuthu question Tweet 

வட இந்தியாக்களில் தமிழர்கள் பயணிக்கும் போது இந்தி மொழி தான் தேசிய மொழி என்ற திணிப்பினை இராணுவத்தினர், காவல் அதிகாரிகள் போன்றவர்கள் நமக்கு சொல்வார்கள். அது தமிழர்களிடையே மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தும். இது அடிக்கடி நிகழும் சம்பவமாகும். சமீபத்தில் கோவா விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் இந்தி மொழிதான் தேசிய மொழி என தமிழ்நாட்டு பெண் ஒருவரிடம் வாதிட்ட சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது “இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா? இந்தியா என்ற நாடு இந்தி என்ற சொல்லடியில்தான் பிறந்ததா? எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழியென்ன இந்தியக் கரன்சியா? இந்தி பேசும் மாநிலங்களிலேயே இந்தி கல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வடநாட்டுச் சகோதரர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்தால் தமிழ் தெரியுமா என்று தெள்ளு தமிழ் மக்கள் எள்ளியதுண்டா? சிறுநாடுகளும்கூட ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சிமொழிகளால் இயங்கும்போது இந்தியாவை ஓர் ஒற்றை மொழிமட்டும் கட்டியாள முடியுமா? 22 பட்டியல் மொழிகளும் ஆட்சிமொழி ஆவதுதான் வினாத் தொடுத்த காவலர்க்கும் விடைசொன்ன தமிழச்சிக்குமான ஒரே தீர்வு” என்றிருக்கிறார்.