அழகிய கண்ணே பட விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு சினிமா ஆளுமைகள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் படத்தின் கதாநாயகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த மேடைக்காக நான் பல வருடங்களாகக் காத்திருந்தேன். பள்ளிக்காலங்களில் இருந்தே சினிமா மீதுதான் எனக்கு ஆர்வம். கதையின் நாயகனாக இன்று நான் மேடையில் நிற்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் தந்தைக்கு என்னுடைய நன்றியை நான் சமர்ப்பிக்கிறேன். அவர் இல்லை என்றால் நான் இல்லை. என்னுடைய தாய்க்கும் என்னுடைய நன்றிகள். நான் இதுபோன்ற மேடையில் பேச வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கனவு. நான் இந்த மேடையில் நிற்பதற்கு என்னுடைய அப்பா காரணம். அவர் இங்கு பேசுவதற்கு நானும் ஒரு சிறிய காரணமாக இருந்திருக்கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது.
திரைத்துறையில் ஒரு நல்ல இடத்துக்கு வர வேண்டும் என்று நினைத்துதான் பயணம் செய்கிறோம். அனைத்து துறைகளிலும் கஷ்டம் இருக்கும். அதனால் நிறைய கஷ்டப்பட்டேன் என்று சொல்ல நான் விரும்பவில்லை. இந்த சினிமா என்னைக் காப்பாற்றும் என்று நம்புகிறேன். இதுபோன்ற விழாக்களில் ஏதேனும் ஒரு ஓரத்தில் பலமுறை நான் அமர்ந்திருக்கிறேன். இன்று இந்த இடத்தில் நான் நிற்பதற்கு நீங்கள் தான் காரணம். கல்லூரி முடித்த பிறகு கே.எஸ்.ரவிக்குமார் சாரின் வீட்டுக்கு அருகில் நான் தங்கியிருந்தபோது, தினமும் அவர் வீட்டின் முன் சென்று நிற்போம். இன்று என்னை வாழ்த்துவதற்கு அவர் வந்தது மிகவும் சந்தோஷம்.
இந்தப் படத்தில் நடிக்க பல நடிகைகள் யோசித்தபோது, சஞ்சிதா ஷெட்டி மட்டும்தான் கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு என்னுடைய நன்றி. அவர் சூது கவ்வும் படம் நடித்த காலத்தில் அவர் எங்களுக்கு ட்ரீம் கேர்ள். ஷூட்டிங்கில் அவர் எந்த பந்தாவும் இல்லாமல் அவ்வளவு ஜாலியாக இருந்தார். பத்திரிகையாளர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.