Skip to main content

‘மீ டூ’ விவகாரம்; இயக்குநர் மீது லீனா மணிமேகலை பொய் குற்றச்சாட்டு - விசாரணையில் அம்பலம்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

leena manimekalai susi ganesan issue

 

பிரபல எழுத்தாளரும் இயக்குநருமான லீனா மணிமேகலை ‘மீ டூ’ விவகாரம் கீழ், தானும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இயக்குநர் சுசி கணேசன் மீது புகார் அளித்திருந்தார். நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே லீனா மணிமேகலையின் புகாரை எதிர்த்து சுசி கணேசன் மான நஷ்ட வழக்கு தொடுத்திருந்தார். 

 

இதையடுத்து லீனா மணிமேகலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் சுசி கணேசனால் தன் உயிருக்கு ஆபத்து என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சர்ச்சையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லீனா மணிமேகலை மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், “தன் மீது பொய் புகார் கூறியுள்ளார். மேலும் சாதி மத மோதலை தூண்டும் விதமாகப் பேசி வருகிறார். இந்த குற்றச்சாட்டில் இருக்கும் உண்மையை கண்டறிந்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார்.  

 

அந்த புகார் தொடர்பாக லீனா மணிமேகலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் அளித்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது காவல்துறை. விசாரணையில் சுசீந்திரன் மீது லீனா மணிமேகலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனத் தெரிய வந்துள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அங்கு பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுமாறும் சுசி கணேசனை நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியும் புகாரை முடித்து வைத்தது காவல்துறை.

 

மேலும், காளி பட போஸ்டர் சர்ச்சையால் லீனா மணிமேகலை மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. லீனா மணிமேகலை தற்போது கனடாவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டொராண்டோ திரைப்பட விழாவில் சுசி கணேசன் படத்துக்கு பாராட்டு

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

susi ganesan movie get applause in toronto international film festival

 

சுசி கணேசன் இயக்கத்தில் ஊர்வசி ரவுடேலா, வினீத் குமார் சிங், அக்‌ஷய் ஓபராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தில் ஹை கிரே'. இப்படம் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் (TIFF) திரையிடப்பட்ட நிலையில் அங்கு பாராட்டைப் பெற்றுள்ளது. 

 

சுசி கணேசன் இதைப் பற்றிப் பேசும் பொழுது, "இந்தப் படம் பாராட்டுகளைப் பெறும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் உலக சினிமாக்களின் பரிச்சயமிக்க பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான வரவேற்பும் பாராட்டும் வருமென்று எதிர்பார்க்கவில்லை. இடி முழக்கம் போன்றதோர் கைதட்டல் சத்தத்தில் பட்ட கஷ்டமெல்லாம் கரைந்து போய்விட்டது. ஒரு படைப்பாளிக்கு இதைவிட என்ன வேண்டும் ?" என்றார் 

 

ஊர்வசி ரவுடேலா கூறுகையில், "ஒரு நடிகையாக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எங்களுக்கு கிடைத்த 'தில் ஹை கிரே' படத்தின் மொத்த நடிகர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றி. திரைப்படங்களுக்கு எல்லைகளை மீறவும், மக்களை இணைக்கவும், முக்கியமான விஷயங்களில் வெளிச்சம் பாய்ச்சவும் வல்லமை உள்ளது” என்றார்.

 

 

Next Story

'காளி' போஸ்டர் சர்ச்சை - இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்யத் தடை 

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

kaali movie poster issue Ban on arrest of director Leena Manimegal

 

பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான லீனா மணிமேகலை புதிதாக எடுத்து வரும் 'காளி' ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமான காளி வேடம் அணிந்த பெண் வாயில் சிகரெட்டுடன், கையில் எல்ஜிபிடி கொடியைப் பிடித்தவாறு இருந்தது தொடர்பாக இந்து மதத்தை அவமதிப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகள், இயக்குநர் மணிமேகலைக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். இதனிடையே டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்   லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

 

இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் தன் மேல் பதியப்பட்ட வழக்கை எதிர்த்து லீனா மணிமேகலை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் லுக்கோ நோட்டீஸ் விடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் லீனா மணிமேகலையின் கோரிக்கையை ஏற்று அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மேல் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.