Skip to main content

பாஜகவில் இணைந்த சிவகார்த்திகேயன் படத் தயாரிப்பாளர்.. 

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

kjr rajesh

 

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் கொட்டப்பாடி ஜே. ராஜேஷ். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். நயன்தாராவின் ’அறம்’, பிரபுதேவாவின் ’குலேபகாவலி’, சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ ஆகிய படங்களை இவர் தயாரித்துள்ளார். சமீபத்தில் ’க/பெ ரணசிங்கம்’ படத்தை தயாரித்திருந்தார். மேலும் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களை  விநியோகமும் செய்துள்ளார்.  

 

இந்த நிலையில், இன்று கொட்டப்பாடி ஜே.ராஜேஷ், பாஜகவில் இணைந்துள்ளார். தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் எல்.முருகன் முன்னிலையில், அவர் தன்னை  பாஜகவில் இணைத்துக் கொண்டார். பாஜகவில் இணையும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "இன்று பாஜகவில் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி. மாநிலத் தலைவர் எல்.முருகன் அளித்த வரவேற்பில் நெகிழ்ச்சியடைந்துவிட்டேன். நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றி கட்சிக்காகவும், மாநில மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் கடுமையாக உழைக்க ஆர்வமாக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


சமீபகாலமாக பாஜகவில் திரையுலகப் பிரபலங்கள் இணைவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஆர்.கே.சுரேஷ், குஷ்பூ, தயாரிப்பாளர் ’பிரமிட்’ நடராஜன் உள்ளிட்டோர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்