Skip to main content

"இளவரசி..." - த்ரிஷாவை கலாய்த்த கார்த்தி

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

karthi tweet about trisha's ponniyin selvan poster

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'.  'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

 

இதனிடையே 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஆகியோரின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது த்ரிஷா போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இளவரசி குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு. 

 

இந்நிலையில் த்ரிஷாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இளவரசி... ப்ளீஸ் உங்களின் லைவ் லொக்கேஷனை அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை ட்ராப் ஆஃப் பண்ணனும்" என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பொன்னியின் செல்வன் டீசர் நாளை(8.7.2022) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தொடர்ந்து படம் பண்ணுங்க” - கோரிக்கைக்கு ஓகே சொன்ன விஜய்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பை பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக மாற்றியது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆராவரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ் ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். 

இந்த நிலையில் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது விஜய்க்கு மாலை அணிவித்த சக்திவேலன், அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். “அரசியலுக்கும், மக்களுக்கும் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடுங்கள். ஆனால் வருஷத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்க. வியாபாரத்தை தாண்டி ரசிகர்களின் கொண்டாட்டம் தியேட்டரில் கூஸ்பம்ஸ் தருணமாக இருக்கிறது. அதனால் தொடர்ந்து படம் பண்ணுங்க” என்றார். இதனிடையே அவருக்கு பதிலளித்த விஜய், சரி என சொல்லிவிட்டு அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தற்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைப் படத்தை தவிர்த்து இன்னொரு படத்தில் நடித்து விட்டு பின்பு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.