ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44வது ஆண்டு பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. 1979-ல் ஆரம்பித்த இக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறது. பின்பு ஒரு கட்டத்தில் அகரம் அறக்கட்டளை இந்த பரிசளிப்பு விழாவை தத்தெடுத்து நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் இவ்விழா நடத்தப்பட்ட நிலையில் அதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய கார்த்தி பல நிகழ்வுகளை பகிர்ந்தார். அதன் இறுதியில், "எல்லாருக்குமே இந்த ஊக்கத் தொகை, உங்களை கைபுடிச்சி நாங்க இருக்கோம் என்று நம்பிக்கை விதைக்கத் தான். அதனால் நம்பிக்கையில்லாமல் இருக்காதிங்க. நீங்க நினைச்சது உங்களை வந்து சேரும். அதை நோக்கிப் பயப்படாமல் போய்கிட்டே இருங்க. எதையும் சந்திக்க முடியும், சாதிக்க முடியும். அதே சமயம் உங்களின் கவனத்தை சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இங்க கவனத்தை சிதறடிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. அப்படி சிதறடிக்கப்படாத மாணவர்கள் தான் இங்கு வந்தவர்கள். பலருக்கும் தமிழ் மீது ஆர்வம் இருப்பது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. கிராமத்தில் இருந்து வருகிற பசங்க எல்லாரும் கவிதை எழுதுவாங்க. தமிழ் ஆர்வத்தோடு சேர்ந்து வாழ்க்கை மேல் இருக்கிற உற்சாகமும் அவர்களுக்கு குறைந்ததே கிடையாது" என்றார்.