Skip to main content

“உங்களைப் பார்த்து நான் பொறாமை கொள்கிறேன்”- 'சூப்பர் ஸ்டாரு'க்கு கமலின் வாழ்த்து!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

kamal hassan


மலையாள சூப்பர் ஸ்டார், மோகன் லால் இன்று தனது 60 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இது ட்விட்டரில் இந்தியளவில் அவருடைய ரசிகர்களால் ட்ரெண்டாகி வருகிறது.

லாலேட்டன் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் மோகன் லால் மலையாள படம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். கடந்த வருடம் அவருடைய நடிப்பில் வெளியான 'லூசிஃபர்' படம் மலையால சினிமாத்துறையில் 200 கோடி வசூல் செய்த முதல் மலையாள படம் என்ற மைல் கல்லைத் தொட்டது.
 


இந்நிலையில் அவருடைய பிறந்தநாளிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், “அன்பிற்குரிய மோகன்லால்... உங்களை உங்கள் முதல் படத்திலிருந்தே எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு திருப்பத்திலும் நம்மைத் தரம் தாழ்த்துபவர்கள் மறைந்திருக்கும் இந்தப் பயணத்தில், உங்களது தொடர்ச்சியான தரமான பணியைப் பார்த்து நான் பொறாமை கொள்கிறேன். நாம் இணைந்து பணிபுரிந்தபோது, இன்னும் கூடுதலாக உங்களைப் பிடித்தது. எனது இளைய சகோதரர் போன்று நீங்கள் நெடுங்காலம் வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்