Skip to main content

அரசியலுக்கு சென்ற காரணம்? - கமல் பகிர்வு

Published on 30/04/2025 | Edited on 30/04/2025
kamalhassan shared a reason why he is entering to politics

நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி அமைத்துள்ள படம்  ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா, அயர்லாந்து, ராஜஸ்தான், டெல்லி, கோவா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் கடந்த ஆண்டே தொடங்கியிருந்தனர். இப்படத்தில் இருந்து டைட்டில் அறிவிப்பு வீடியோ மற்றும் ரிலீஸ் தேதி டீசர் ஆகியவை முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பின்பு சமீபத்தில் கமல் எழுத்தில் வெளியான முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் படக்குழுவினர் தீவிர புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு பேட்டியில் பேசிய கமல்ஹாசன் அரசியலுக்கு போனதற்காக காரணம் ஒன்றையும்  பகிர்ந்திருந்தார். அவர் பேசியதாவது, “இன்றைக்கு ஏகப்பட்ட தொடர்புகொள்ளும் கருவிகள் இருக்கிறது. அதன் மூலம் எங்கு இருந்தாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு விஞ்ஞானத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். அது இல்லையென்றால் வெளியுலகத்தில் இருந்து எங்களுக்கு சுத்தமாகவே தொடர்பு இல்லாமல் போயிருக்கும். இந்த மாதிரி விஷயங்கள் இருப்பதால் தான் நான் அரசியலுக்கே போனேன்” என்றார். 

சார்ந்த செய்திகள்