
இந்தி, தமிழ், பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிப் படங்களுக்கு பாடல் பாடி வருகிறார் ஜோனிதா காந்தி. குறிப்பாக சமீபத்தில் பீஸ்ட் படத்தில் இவர் பாடிய 'அரபிக் குத்து', டான் படத்தில் பாடிய 'பிரைவேட் பார்ட்டி' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜோனிதா காந்தியிடம் ஒரு ரசிகர், "இந்த ட்விட்டிற்கு ஜோனிதா காந்தி பதில் அளித்தால் எனது புதிய பைக்கை உடைத்து விடுகிறேன்" என அவரை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்து அந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஜோனிதா காந்தி ரிப்ளை செய்திருந்தார். அந்தப் பதிவில் "தயவு செய்து எதையும் உடைத்து விடாதீர்கள்" எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.
திரைப் பிரபலங்களுடன் பேசுவதற்கு ரசிகர்கள் இதுபோன்று சில விசித்திரமான முயற்சிகளைச் செய்து வருகின்றனர். ஆனால் திரைப் பிரபலங்கள் பெரும்பாலும் இதை விரும்புவதில்லை. இருப்பினும் ரசிகர்கள் தொடர்ந்து இதுபோல் செய்வது வேடிக்கையாகவும் விநோதமாகவும் உள்ளது. மேலும் இந்த ரசிகரின் பதிவு குறித்து இணையவாசிகள், “எங்கயிருந்துடா வரீங்க...” “எந்த ஊருடா நீங்க...” என்கிற வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Pls don’t broke anything https://t.co/1giaiIHy7B— Jonita (@jonitamusic) November 3, 2022